சுற்றுலா தளமாகும் 157 ஆண்டுகள் பழமையான சிறை
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கூடலூர்: நடுவட்டத்தில் சீரமைக்கப்பட்டு வரும் 157 ஆண்டுகள் பழமையான சிறை, விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சியில், நடுவட்டத்தில் மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் 'கொய்னா' மருந்து தயாரிக்க 'சின்கோனா' மரங்களை அதிக அளவில் வளர்க்கும் பணியை 1860ல் துவங்கினர். இப்பணியில், உள்ளூர் மக்களை பயன்படுத்தினர்.
பணிகளை விரைந்து முடிக்க, சிறை கைதிகளை கொண்டு வர முடிவு செய்தனர். இதற்காக 1864-65ல் நடுவட்டத்தில் இரண்டு ஹால், ஒன்பது கைதிகள் அறை, தூக்கு மேடை, கடும் தண்டனை இருட்டு அறை, தற்காலிக கோர்ட் வசதியுடன் சிறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

சின்கோனா மரங்கள் நடவு பணிகள் முடிந்ததை தொடர்ந்து, சிறை கைதிகள் விடுவிக்கபட்டு, 1869 சிறை மூடப்பட்டது. தொடர்ந்து உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு, பணிகளை மேற்கொண்டனர். தொடர் இழப்பு ஏற்பட்ட, 1990ல் இப்பகுதி தமிழக அரசு தேயிலை தோட்ட நிறுவனமான டான்டீக்கு ஒப்படைக்கப்பட்டு, தேயிலை தோட்டமாக மாற்றப்பட்டது. பழமையான கட்டடங்களை டான்டீ நிர்வாக பணிக்காக பயன்படுத்தி வருகிறது.
ஆனால், சிறை மட்டும் பராமரிப்பின்றி விடப்பட்டது. இப்பகுதியின், வரலாற்றுச் சூவடான சிறையை புணரமைத்து சுற்றுலா தளமாக மாற்ற மக்கள் வலியுறுத்தினர், 2008-10 நிதி ஆண்டில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சிறையின் சில பகுதிகள் சீரமைத்து, சுற்றுலா தளமாக மாற்றி, சுற்றுலா பயணிகளை அனுமதித்து வந்தனர். போதுமான அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், சிறையின் பழமைகள் மாறாமல் சீரமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்காக, 2918-19 நிதி ஆண்டில் சிறப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் 74.9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X