மயான பாதை கேட்டு ரயில் மறியல் போராட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
மயான பாதை கேட்டு ரயில் மறியல் போராட்டம்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே நல்லிவீரன்பட்டி கிராமம் உள்ளது. கிராம மயானத்திற்கு செல்லும் வழியில் ரயில் பாதை குறுக்கிடுகிறது.

இறந்தோர் உடலுடன் ரயில் தண்டவாளத்தைக் கடக்க மணலைக் கொட்டி பாதையை உருவாக்கி இருந்தனர். ரயில்வே துறை அதிகாரிகள் அந்த மணல் பாதையை தோண்டி தடை ஏற்படுத்தியிருந்தனர். இந்த இடத்தில் தற்காலிகமாக ரயில் பாதையை கடக்க தரைவழி பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இதனை வலியுறுத்தி நேற்று காலை 8:55 மணியளவில் மதுரையில் இருந்து தேனி சென்ற ரயிலை மறிக்க முயன்றனர். உசிலம்பட்டி ஸ்டேஷன் முன்பாக ஊராட்சித் தலைவர் அஜித்பாண்டி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மறியலை வாபஸ் பெற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X