கொட்டாம்பட்டி : கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு வீடு ஒழுகவே முத்துலெட்சுமி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் தங்கினார். இந்நிலையில் வீடு திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வருவாய் துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவரின் எதிர்பார்ப்பு.