கெரசின் குண்டு வீச்சு சம்பவம் : கோவையில் ஒருவர் கைது
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை;கோவை மாவட்ட பா.ஜ., அலுவலகம் அருகே கெரசின் குண்டு வீசிய பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்; மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.கோவையில் கடந்த, 22ம் தேதி இரவு, 8:30 மணிக்கு சித்தாபுதுாரில் மாவட்ட பா.ஜ., அலுவலகம் அருகிலும், வேறு இரு இடங்களிலும் கெரசின் குண்டுகள் வீசப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன் முடிவில், நேற்றிரவு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:மாவட்ட பா.ஜ., அலுவலகம் அமைந்துள்ள வி.கே.கே. மேனன் ரோட்டில் கெரசின் குண்டு வீசியது தொடர்பாக, துடியலுாரை சேர்ந்த சதாம் உசேன், 31, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், பி.எப்.ஐ., அமைப்பில் துடியலுார் பகுதி பொறுப்பாளராக ஏற்கனவே செயல்பட்டுவந்தவர்; தற்போது, எஸ்.டி.பி.ஐ., அமைப்பில் உள்ளார்.இவருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்ட இன்னொருவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடி வருகிறோம். அதே நாளில், 100 அடி ரோட்டில் நடந்த மற்றொரு குண்டு வீச்சு சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று தனிப்படையினர், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப வழிமுறைகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். சதித்திட்டம் தொடர்பான கோணத்தில் வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. கோவையில் குண்டு வீச்சு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட, 6 வழக்குகளில், இதுவரை, 3 வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளது. மீதமுள்ள வழக்குகளின் விசாரணையும் தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X