மேட்டுப்பாளையம்;ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த கத்தி போடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி கொலு உற்சவம் விழா, நேற்று இரவு கத்தி போடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்பு, ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, 'சவுன்டம்மன் தாயே வா' என கூறினர். கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், ஜி.எம்., கண் மருத்துவமனை, அன்னுார் ரோடு, பைவ் கார்னர், அண்ணாஜி ராவ் ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. முன்னதாக செண்டை மேளம் செல்ல, தொடர்ந்து கத்தி போடுபவர்கள் ஆடிச்சென்றனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.