மின்சார ரயிலில் சாகச பயணம்44 மாணவர்களுக்கு அபராதம்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சென்னை-மின்சார ரயில்களில் படிகளில் தொங்கியப்படி சாகச பயணம் செய்த 44 மாணவர்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து, அபராதம் விதித்துள்ளனர். சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில்களில், காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், மின்சார ரயில்களின் படியிலும், ஜன்னல்களிலும் தொங்கிய படி சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளையிலும் ஈடுபடுகின்றனர். விதி மீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.பி.எப்., படையினருக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை ஆணையர் செந்தில் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில் தலா ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கூறியதாவது: ரயில் பயணத்தின் போது சக பயணியருக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து விதிமீறல்கள், வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, கடந்த 12ம் தேதிக்கு பிறகு, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லுாரிகள் முடியும் நேரத்தில் ரயில் நிலையங்கள், மின்சார ரயில்களில் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்சார ரயில்களில் படியில் தொங்கி பயணித்த 44 மாணவர்களை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X