அண்ணாதுரை சிலை அவமதிப்பு; திண்டிவனத்தில் 3 பேர் சிக்கினர்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கண்டமங்கலம்-கண்டமங்கலத்தில், அண்ணாதுரை சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில், விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாதுரை சிலை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, அதன் கீழே தி.மு.க., எம்.பி., ராஜாவின் படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி வைத்து, செருப்பு மாலை அணிவித்திருந்தனர்.மேலும், அருகில் உள்ள தி.மு.க., கொடிக் கம்பத்தில் இருந்த கொடியை அகற்றி அண்ணாதுரை சிலையின் முகத்தை மறைத்து கட்டியிருந்தனர்.கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து, அவற்றை அகற்றினர்.இது சமூக வலைதளம் மூலம் பரவியதைத் தொடர்ந்து கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், செயலாளர்கள் பிரபாகரன், செல்வமணி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சீனு செல்வரங்கம் உட்பட 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் திரண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.அண்ணாதுரை சிலையை சேதப்படுத்தி அவமதிப்பு செய்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டமங்கலம் தி.மு.க., கிளைச் செயலாளர் இளங்கோவன் புகார் கொடுத்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.இதற்கிடையே, வி.சி., மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் குப்புசாமி ஆகியோர் தலைமையில் சிலைக்கு எதிரே 11:30 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 11:45 மணியளவில் மறியலை விலக்கிக் கொண்டனர்.எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ், டி.எஸ்.பி.,பார்த்திபன் ஆகியோர் தலைமையில் சிறப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு கண்டமங்கலத்தைச் சேர்ந்த பா.ஜ.,வினர் அண்ணாதுரை சிலை அருகே பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.இந்நிலையில், கண்டமங்கலம் ஒன்றிய பா.ஜ., தலைவரான வழக்கறிஞர் பிரகலாதன் காரில் சிலை அவமதிப்பு வழக்கில் தொடர்புடைய சிலர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில் நேற்று மாலை 4:00 மணியளவில், திண்டிவனம் காவல் நிலையம் அருகே பிரகலாதன் வந்த காரை போலீசார் நிறுத்தி, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.அங்கு, பா.ஜ., உறுப்பினர்கள் கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுாரைச் சேர்ந்த அருணாச்சலம், 21; கண்டமங்கலம் வேணு மகன் வீரமணி, 28; சடையப்பன் மகன் அப்பு என்கிற பிரகதீஷ், 22; ஆகியோரிடம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X