கடலுார்-சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த ஆலப்பாக்கம், கீழ் பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் நாகூரான் மகன் பாஷா,25; இவர், 17 வயது சிறுமியுடன் கடந்த 5 மாதமாக பழகி வந்தார். சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.இந்நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்த பாஷா, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமடைந்தது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, பாஷாவை கைது செய்தனர்.