கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
Latest district News

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு காப்புகட்டுதல் அலங்காரத்துடன் முதல் நாள் பூஜைகள் நடந்தது. கொலுமண்டபத்தில் கொலுவைக்கப்பட்டிருந்தது. பக்தர்களும் கொலுவாங்கி வந்து மண்டபத்தில் வைத்து பிராத்தித்தனர். நாகல்நகர் மாதா புவனேஸ்வரி அம்மன் கோயிலில் லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடந்ததுமாலை அம்மன் ஆரல்வாய் மொழி இசக்கி அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள்பாலித்தார். தீபாராதனை நடந்தது.

நாகல்நகர்,பாரதிபுரம்,சுண்ணாம்புகாளவாசல் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.மலைக்கோட்டை அடிவாரம் பத்திரகாளியம்மன் கோயிலில் தசராபண்டிகையின்முதல்நாளான நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. மாலை அம்மன் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம்செய்தனர்.நகரில் பல தொழில் நிறுவனங்கள்,கல்வி நிலையங்கள்,வீடுகளில் நவராத்திரியை முன்னிட்டுகொலுவைத்து பூஜைகளை செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X