திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சதீஷ், 40; கடந்த 24ம் தேதி இரவு 7:40 மணியளவில் திருக்கோவிலுார் பைபாஸ் வழியாக டி.கே.மண்டபத்திற்கு, மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.அய்யனார் கோவில் பின்புறம் உள்ள நிழற்குடை அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.