உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே மோட்டார் கொட்டகையை இடித்து, கொலை மிரட்டல் விடுத்த 2 மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சுந்தரவாண்டியைச் சேர்ந்தவர் ேஷக்சாப் ஜான், 68; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 28ம் தேதி ஷேக்சாப்ஜான் நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகையை ஜே.சி.பி., மூலம் ேஷக் அப்துல்லா இடித்தார். இதனைத் தட்டிக்கேட்ட ேஷக் சாப் ஜானை, ஷேக் அப்துல்லா தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.எலவனாசூர்கோட்டை போலீசார் ஷேக் அப்துல்லா, அவரது சகோதரர் ஷேக் சதாம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.