தேனி : தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் கட்டட வரைவாளர், டிராக்டர் மெக்கானிக் உள்ளிட்ட 11 தொழிற்பிரிவுகள் உள்ளது. இதில் 440 பேர் படிக்கலாம். கடந்த 2 ஆண்டுகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கை நடந்த நிலையில் இந்தாண்டு மாணவ, மாணவியர்கள் 415 பேர் விண்ணப்பித்து 94 சதவீதம் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்தாண்டை விட நடப்பாண்டு 48 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இலவச பயிற்சி, மாத உதவித்தொகை ரூ. 750, இலவச பாடப்புத்தகம், சைக்கிள், லேப்டாப், பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். எந்த வயதிலும் பயிற்சியை தொடரலாம். செப்.,30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் சேகரன் தெரிவித்துள்ளார்.