விழுப்புரம்-வானுார் அருகே வீட்டில் கிளினிக் வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளித்த, அரசு மருத்துவமனை கம்பவுண்டர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வானுார் அடுத்த கிளியனுார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மகள் சஞ்சனா, 5; அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 18 ம் தேதி, சஞ்சனாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், உப்புவேலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பவுன்டராக பணிபுரியும் தைலாபுரத்தைச் சேர்ந்த கணேசன், 54; என்பவர் வீட்டில் நடத்தி வரும் கிளினிக்கில் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு, சிறுமிக்கு கணேசன் ஊசி போட்டுள்ளார். மறுநாள் 19ம் தேதி சிறுமி சஞ்சனாவுக்கு உடல் முழுதும் கொப்பளத்துடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டு, ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.உடன் ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, சிறுமியின் தந்தை சுகுமார் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.