திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து பிள்ளைமார் பெருமக்கள் பேரவை,ஐ.எம்.பி.ஏ., இணைந்து கல்விதிருவிழாவை பி.எஸ்.என்.ஏ., மஹாலில் நடத்தியது.
10,12ம் வகுப்பில் வெற்றி பெற்ற 9 மாணவிகளுக்கு தங்ககாசுகள்,நுாற்றுக்கு மேற்பட்ட சிறப்புபரிசுகள் வழங்கப்பட்டன.மாநகராட்சி மேயர் இளமதி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், சங்க கவுரவ தலைவர் ரகுராம்,தலைவர் சந்திரன், செயலாளர் பாஸ்கர்,பொருளாளர் சண்முகவேல்,ஐ.எம்.பி.ஏ., தலைவர் சண்முகவேலு,பொருளாளர் கார்த்திகேயன்,பேச்சாளர் கிருஷ்ணா வரதராஜன் பங்கேற்றனர்.