பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு ரோந்து பணியை அதிகரிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் பரவலாக வீடுகளின் கதவை உடைத்து நகை ,பணம் கொள்ளை நடப்பது அதிகரித்து உள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடம், பஸ்களிலும் பிக்பாக்கெட் தொல்லை அதிகரித்துள்ளது. ரோடு,தெருக்களில் நடந்து , டூவீலர்களில் செல்லும் பெண்களை குறிவைத்து நகை வழிப்பறியும் அவ்வப்போது நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதோடு மூகமூடி அணிந்து வீடுகளில் புகும் கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை ,பணம் பறிப்பதும் தொடர்கிறது. இருந்த போதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போலீசாரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இரவு ரோந்து பணி என்பது எங்கும் இல்லை.இதை முறைப்படுத்தினாலே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . இனியாவது இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் அதீத நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...............
ரோந்து பணியை அதிகரியுங்க
பொதுமக்கள் அதிக மதிப்புள்ள நகைகளை கூட்டம் உள்ள இடங்களில் அணிந்து வர கூடாது. வீட்டில் வைத்துள்ள விலைமதிப்புள்ள பாதுகாக்க தகுந்த அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். வங்கி பெட்டகங்களில் நகைகளை பாதுகாக்க வேண்டும். வெளியூர் செல்லும் போது போலீசாரிடம் தெரிவித்து, தகுந்த பாதுகாப்பை உறுதி செய்த பின் செல்வது அவசியம்.போலீசாரும் இரவு ரோந்து பணியை அதிகரிக்க வழி காண வேண்டும். சபரி ஹரி, அலைபேசி விற்பனையாளர்,பழநி............