அனுமதியின்றி விளம்பர பலகை: ரூ.5,000 அபராதம் விதித்தது மாநகராட்சி
Added : செப் 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கோவை: ஐகோர்ட் உத்தரவை மீறி, விளம்பர பலகை வைக்க அனுமதியளித்த, கட்டட உரிமையாளருக்கு, கோவை மாநகராட்சி ரூ.5,000 அபராதம் விதித்தது.

வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், சாலை விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது என, சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து, விளம்பர பலகைகளை அகற்றி வருகிறது.

சில நாட்களுக்கு முன், 94வது வார்டு குறிச்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கவனத்துக்கு சென்றது.தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா தலைமையிலான அலுவலர்கள் நேரில் சென்று, மூன்று இடங்களில் இருந்த விளம்பர பலகைகளை கிழித்தனர்.

ஆனால், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா அறிவுறுத்தியதுபோல், இரும்பு கம்பிகளை அகற்றாமல் விட்டு விட்டனர். அதனால், ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் அதே இடத்தில் விளம்பர பலகை வைத்து விட்டனர். தகவலறிந்த கமிஷனர் பிரதாப், விளம்பர பலகையை அகற்றுதோடு, ஐகோர்ட் உத்தரவை மீறி, அனுமதியின்றி விளம்பர பலகை வைக்க அனுமதியளித்த கட்டட உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு, காவல்துறையில் புகார் கொடுத்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, விளம்பர பலகையை கிழித்ததோடு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இரும்பு கம்பிகளையும் அறுத்தெடுத்தனர். மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும். மீறி வைத்தால் அபராதம் விதிப்பதோடு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.



அதையும் கவனிங்க!



சென்னை ஐகோர்ட் வழங்கிய இடைக்கால உத்தரவை காண்பித்து, ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர்கிறது. ரயில்வே இடங்களில் வைப்பதாக இருந்தாலும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கலெக்டரிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். அவ்வாறில்லாமல், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சாலை மார்க்கத்தில் செல்வோரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், மேம்பாலம் அருகில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விஷயத்தில், கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்தி, விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Muralidaran - Chennai,இந்தியா
27-செப்-202210:40:24 IST Report Abuse
A.Muralidaran கொலை செய்பவனுக்கு ஆயுள் அல்லது தூக்கு தண்டனை ஆனால் கலப்படம் செய்பவனுக்கு சில ஆயிரங்கள் பைன் இந்த இரண்டு குற்றங்களும் ஓரே மாதிரி ஆனது. அதைப் போல் இந்த விளம்பர பலகைகளும் அடங்கும்.
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
27-செப்-202210:18:02 IST Report Abuse
ThiaguK அரசாங்க சுவர் மற்றும் வீடுகளில் ஓட்டும் பிளேஸ் மற்றும் போஸ்டர்கள் ஓட்டும் கூட்டத்திற்கும் தண்டனை தேவை. மதுரை அணைத்து சுவர்களும் அரஜாகம் செயகிறார்கள் ...மத்திய பேருந்து நிலையம் குப்பையும் கூளங்களாக நாறிக்கொண்டுள்ளதையும் நிவர்த்தி செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X