கடலுார்-சவுதி அரேபியாவில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டி, கலெக்டரிடம் மகள் மனு அளித்தார்.வடலுார் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் அன்பு,54; கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் சவுதி அரேபியாவிற்கு வேலை சென்றார். அங்கு ரியாத் நகரில் வேலை செய்து வந்த அவர், கடந்த 21ம் தேதி, அங்கு மாரடைப்பால் இறந்தார்.அதனையொட்டி அவரது மகள் கிரிஜா, மகன் ஜெய் ஆகியோர், தங்கள் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டி நேற்று, கலெக்டரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.