உதவி பேராசிரியை திருமணத்திற்காக தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



விருத்தாசலம்-உதவி பேராசிரியை திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் திருடு போனதை மீட்டுத் தரக்கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி தனலட்சுமி,60; இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இவர்களில் இளைய மகள் ஜெலட்சுமி,30; காரைக்கால் வேளாண் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி, தனலட்சுமி, அவரது மகன் விக்னேஷ் ஆகியோர் வீட்டை பூட்டிக் கொண்டு முந்திரி தோப்பிற்கு சென்று வந்தபோது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. பீரோவில், ஜெயலட்சுமி திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 110 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.நகைகள் திருடு போனதால், ஜெயலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. இதனால், மர்ம நபர்களை கண்டுபிடித்து, நகைகளை மீட்டு தர வலியுறுத்தி கடந்த 5ம் தேதி தனலட்சுமி, மகள் ஜெயலட்சுமி, மகன் விக்னேஷ் ஆகியோர் புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நேற்று புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது, தனிப்படை அமைத்து நகை, பணத்தை மீட்டு தராவிட்டால், போலீஸ் ஸ்டேஷன் முன் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி தனலட்சுமி குடும்பத்தினர் கதறி அழுதனர்.அவர்களிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X