வக்பு வாரியத்தால் பாதித்தவர்கள் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



விருத்தாசலம்-வக்பு வாரியத்தால் பாதித்தவர்கள் நேற்று விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர், இந்திரா நகர், சிந்தாமணி நகர், நபிகள் நாயகம் தெரு, ஆலடி ரோடு, வயலுார், பூந்தோட்டம் மற்றும் கார்குடல், சின்னவடவாடி, கோ.மாவிடந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குறிப்பிட்ட இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என, விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.இந்த சொத்துக்களின் மதிப்பு பூஜ்ஜியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த சொத்துக்களை விற்க, வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதில், பாதிக்கப்பட்டவர்கள் நேற்று விருத்தாசலம் பாலக்கரையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, வக்பு வாரிய பரிந்துரையை உடனடியாக புறக்கணிக்க வேண்டும். சட்டப்படி கிரையம் பெற்ற தங்கள் சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சிவாஜி சிங், ரவி, விஸ்வநாதன், நடராஜன், புஷ்பதேவன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X