கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்: அரசியல்வாதிகள் வசூல் வேட்டை; அதிகாரிகள் எச்சரிக்கை
Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: வேளச்சேரி ஏரியில் உபரிநீர் வெளியேறவும், பாசன வசதிக்காகவும், 40 ஆண்டுக்கு முன் மூன்று இடங்களில் துணை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பில் உள்ள இந்த கால்வாய்களை மீட்டெடுக்க, நீதிமன்ற உத்தரவுபடி நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதை தடுப்பதாக கூறி, யாராவது பணம் கேட்டால் கொடுத்து ஏமாறாதீர்கள் என, ஆக்கிரமிப்பாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



latest tamil news



அடையாறு மண்டலம், 175 மற்றும் 177 ஆகிய வார்டுகளில், வேளச்சேரி ஏரி அமைந்துள்ளது. சர்வே எண்: 123/1ல் 265.48 ஏக்கர் பரப்பில் இருந்தது. அரசு திட்டங்கள், சாலை கட்டமைப்பு போன்ற வசதிகளுக்காக ஏரி இடம் எடுக்கப்பட்டது.தற்போது, 55 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதிலும், 1,800க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. தற்போதும், இரண்டு, மூன்று மாடி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

ஏரி உபரிநீர் வெளியேற, 15 அடி அகல கால்வாய் உள்ளது. ஏரி ஷட்டர் பழுதானால், மாற்று ஏற்பாடாக, மூன்று இடத்தில் துணை கால்வாய்கள் அமைக்கப்பட்டன.இந்த கால்வாய், உபரிநீர் வெளியேறவும், பாசன வசதிக்காகவும், 40 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய்கள், அடையாளம் தெரியாமல் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது.

சமீபத்தில், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, ஏரி மற்றும் 10 அடி அகல கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பை வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி நடத்தியது.






இதில், 175வது வார்டில், வி.வி.காலனி, மகாலட்சுமிநகர், மோகனபுரி, ஏ.ஜி உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் கால்வாயில், 60க்கும் மேற்பட்ட ஆக்கிரிமிப்புகள் இருப்பது தெரியவந்தது. மேலும், 176வது வார்டு, சசிநகர், பாலாஜிகாலனி பகுதியில், 15க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதேபோல், 177வது வார்டிலும் புதிய ஆக்கிரமிப்புகள் உள்ளன.

ஆக்கிரமிப்பாளர்களில் சிலர், கால்வாய் என தெரிந்தபின், அந்த இடத்தை காலிமனையாக விட்டு, அதில், மரங்கள் நட்டுள்ளனர். பலர், வீடு, கடை, மருத்துவமனை, கோவில் என, கட்டமைப்பின் ஒரு பகுதியை, கால்வாய் மீது கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த கால்வாய்களை மீட்டெடுக்க, வருவாய்த்துறை, நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நடவடிக்கையை தடுப்பதாக கூறி, அரசியல்வாதிகள் பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வேளச்சேரியில், ௪௦ ஆண்டுக்கு முன், 50க்கும் குறைவான வீடுகளே இருந்தன. தற்போது, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. ஏரியின் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையில் அப்போதே, மாற்று துணை கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, இந்த கால்வாய்கள் மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி, நோட்டீஸ் வழங்கி கால்வாய்கள் மீட்டெடுக்கப்படும். இதை, மாநகராட்சியுடன் இணைந்து செய்கிறோம்.
- வருவாய் துறை அதிகாரிகள்






வசூல் வேட்டை!




வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, 10 ஆண்டுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து உள்ளூர் அரசியல்வாதிகள் பணம் வாங்கி, நடவடிக்கையை தடுத்தனர். அதுபோல், துணை கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் தற்போதும் அரசியல்வாதிகளை நாடி உள்ளனர். நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ஆக்கிரமிப்பின் அளவுக்கு ஏற்ப, 50 முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை, அரசியல்வாதிகள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, வருவாய்த்துறை, நீர்வளத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் தலையீடு எடுபடாது. ஆக்கிரமிப்பாளர்கள், பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அதையும் மீறி, பணம் கேட்டால், கட்சி தலைமை அல்லது போலீசில் புகார் அளிக்கலாம்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
27-செப்-202218:31:39 IST Report Abuse
Kumar அப்ப அரசாங்கம் ஆக்கிரமிப்பு செய்தால் தப்பு இல்லை.அப்ப வெள்ளம் வந்தால் இது அரசு ஆக்கிரமிப்பு என்றுசுத்திப் போகுமா?இல்லை அந்தப் பக்கம் வெள்ளம் வராதா.ஆகா புத்திசாலிகள்...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-செப்-202212:01:05 IST Report Abuse
அசோக்ராஜ் முதலில் சட்டப் பல்கலைக்கழகம் அரசாங்கத்தாலேயே ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ள நீர்நிலையை மீட்கவும். மதுரை உலகனேரியை மீட்கவும். பிறகு ஊரானுக்கு புத்தி புகட்டவும்.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
27-செப்-202210:58:42 IST Report Abuse
JeevaKiran நல்ல முயற்சி.. எந்த ஒரு அ.வியாதியும் குறுக்கே வந்தால், முதலில் அவனை தூக்குங்கள். பிறகு ஆக்ரமிப்பு அகற்றம் சுலபமாக நிறைவேறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X