பணி மேம்பாடுக்கு காத்திருப்பு கல்லுாரி பேராசிரியர்கள் தவிப்பு
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோவை : அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் இணை பேராசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பணி மேம்பாடு வழங்கப்படாமல் இருப்பதால் ஆராய்ச்சி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.



தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்கள் என, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். உதவி பேராசிரியர்களாக நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்தடுத்த நான்கு ஆண்டுகளில் மூத்த உதவி பேராசிரியர், தேர்வு நிலை உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் என பணி மேம்பாடு வழங்க வேண்டும்

.கடந்த, 2006 மற்றும், 2007ல் பணி நியமனம் பெற்றவர்கள், 15 ஆண்டுகளை கடந்தும் மூத்த பேராசிரியர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். பிஎச்.டி., படிப்புகளுக்கு வாய்மொழி தேர்வு நடத்தும் தேர்வாளர், இணை பேராசிரியராக இருக்க வேண்டும். இணை பேராசிரியர் பற்றாக்குறையால் அனைத்து பாடப்பிரிவுகளிலும் ஆராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.அரசு மட்டுமின்றி தனியார் கல்லுாரிகளிலும் ஆசிரியர் பணியில் சேர முனைவர் பட்டம், தேசிய அல்லது மாநில அளவிலான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், பிஎச்.டி.,(முனைவர்) ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், இணை பேராசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் திருநாவுகரசு கூறுகையில்,''மாநிலம் முழுவதும், 40 சதவீதம் பேர் பணி மேம்பாடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் கண்டுகொள்வதாக இல்லை. இணை பேராசிரியர்களாக பணி மேம்பாடு அளிக்கப்பட்டால், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை மேலும், 50 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அரசு கல்லுாரிகளின் தர மதிப்பீடும் அதிகரிக்கும்,'' என்றார்.



ஆறு மாணவர்கள்!

உதவி பேராசிரியர்கள், மூத்த உதவி பேராசிரியர்கள், தேர்வு நிலை பேராசிரியர்கள் நிலையில், 4 ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே ஆய்வு வழிகாட்டியாக செயல்பட முடியும். இணைப் பேராசிரியராக, 6 மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். பேராசிரியர்களுக்கு மட்டுமின்றி, ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X