பண்ருட்டி-பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நலவேட்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு ைஹபவர் ஜிம் பரிமளரங்கன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் விஜயரங்கன் வாழ்த்துரை வழங்கினார்.நெய்வேலி பழனிவேல் - பேராசிரியர் கிருஷ்ணவேணி , விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன்- செந்தில்வடிவு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் ராஜவேல்-கஸ்துாரி தம்பதியினர் சிறப்புரையாற்றினர்.மன்ற பொருளாளர் அபிராமி விஜயரங்கன் மனைவி நல வேட்பு விழா குறித்து பேசினார். விழாவில் 100க்கும் மேற்பட்ட தம்பதிகள் காப்புகயிறு கட்டி, மாலை மாற்றிக்கொண்டு கண்விழி நோக்கி திருமணம் நடந்தது.விழா ஏற்பட்டாளர்களுக்கு எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார். திட்ட அலுவலர் சுமித்ராபாபு நன்றி கூறினார்.