கடலுார்-கடலுாரில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.மின்வாரிய ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் கேப்பர் மலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாநில இணைசெயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி., மாநில தலைவர் மனோகரன், சி.ஐ.டி.யூ., மாநில துணை பொதுச் செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளர் பரணி, பொறியாளர் சங்க வட்டத் தலைவர் இளவழகன,் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.