தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்'
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை : 'மக்கள் அதிகாரம்' என்ற அமைப்பிற்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.



திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் நரசிம்மன், தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு மனு ஸ்மிருதி, வேதங்கள் மற்றும் ஆகமங்களை ஸ்ரீரங்கத்தில் செப்.,17ல் மக்கள் அதிகாரம் அமைப்பினர் எரிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.வேதங்களை நம்பும் ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், வேத புத்தகங்களை தவறாக சித்தரிக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியிருந்தார்.
ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மற்றொரு மனு:
மக்கள் அதிகாரம் அமைப்பினர் கருத்து சுதந்திரம் பெயரில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்புகின்றனர்; நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்கின்றனர்.அந்த அமைப்பினர் மற்றும் தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதை தடை செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுக்களை கடந்த 16ல் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பில், பொது அமைதியை நிலைநாட்ட தி.க., மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளுடன் சமாதானக் கூட்டம் நடந்தது.'செப்.,17ல் நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்படுகிறது. மீறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது' எனக் கூறியது.
அப்போது நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட பகுதியில் பொது அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் என்ற போர்வையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மனுதாரர் கூறுகிறார்.'தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, 'செப்.,17ல் ஸ்ரீரங்கத்தில் எவ்வித விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.'எனவே, வழக்கு பைசல் செய்யப்படுகிறது. மற்றொரு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி, மூன்று வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது' என உத்தரவிட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X