கல்வராயன்மலை ஒன்றியத்தில் பள்ளிகள் இணைப்பு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மனு
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சங்கராபுரம்-சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள 7 பள்ளிகளை கல்வராயன்மலை ஒன்றியத்தில் சேர்க்க வேண்டாம் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.மாநிலத் தலைவர் லட்சுமிபதி, கலெக்டர், சி.இ.ஓ., - டி.இ.ஓ., மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏ., ஆகியோரிடம் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவுக்கிணங்க கல்வராயன்மலை ஒன்றியத்தை தனியாக பிரித்து கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஒன்றியங்களில் இருந்து சில பள்ளிகளை ஒருங்கிணைத்து புதிய ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.நிர்வாக வசதிக்காக பிரித்து புதிய வட்டாரக் கல்வி அலுவலகம் அமைவதை வரவேற்கிறோம். அதே வேளையில் சங்கராபுரம் ஒன்றித்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளான புதுபாலப்பட்டு, புதுபாலப்பட்டு காலனி, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, தும்பை, மோட்டாம்பட்டி, ஆனைமடுவு, வடபாலப்பட்டு ஆகிய பள்ளிகளை சங்கராபுரம் ஒன்றியத்திலேயே தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்.இப்பகுதி பள்ளிகளுக்கும் வெள்ளிமலையில் புதிதாக அமைய உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கும் 80 கி.மீ., துாரம் உள்ள நிலையில் அலுவலகத்திற்கு புள்ளி விபரம் அளித்தல். இலவச பொருட்கள் பெறுதல். பயிற்சிக்குச் செல்லுதல் என பல்வேறு நிகழ்வுகளுக்கு வெள்ளிமலை சென்று வர பெறும் சிரமம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு தான் வெள்ளிமலை செல்ல பஸ் வசதி உள்ளது.அதே வேளையில் சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலகம் 10 முதல் 15 கி.மீ., தொலைவில் தான் உள்ளது.எனவே, கல்வி நலன் மற்றும் ஆசிரியர் நலன் கருதி சங்கராபுரம் ஒன்றியத்திலேயே தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X