குழந்தை திருமண புகாரில், சிறுமியின் பெற்றோரை, காங்கேயம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம், பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தாமரை, 65; இவரின் மகன் பூபதி, 39; தனியார் நிறுவன ஊழியர். காரைக்குடியை சேர்ந்த தம்பதி கேசவன்-சகுந்தலா தம்பதியின், 16 வயது மகளை, பூபதி திருமணம் செய்து கொண்டார். காங்கேயத்தில் திருமணம் நடந்தது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் போனது. சமூக நல அலுவலர் கள ஆய்வு செய்து உண்மை என தெரியவே, காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், சிறுமியின் பெற்றோரை கைது செய்தனர். பூபதி மற்றும் செந்தாமரையை தேடி வருகின்றனர்.