நகராட்சியில் 'சர்வர்' கோளாறு வரி செலுத்த முடியாமல் ஏமாற்றம்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகளில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குத்தகை வரி வசூலிக்கப்படுகிறது. நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வரி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நேற்று காலை, 10 மணிக்கு வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வந்த மக்கள், மதியம், 2:௦௦ மணி வரை கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு சரியாகாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சர்வர் பிரச்னையை சரிசெய்ய வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
நகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக சர்வர் பிரச்னை என கூறுகின்றனர். இதனால் வரி செலுத்த முடிவதில்லை. வரி செலுத்துபவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக, ஆன்லைனில் வரி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி இணையதள பக்கம் ஓபன் ஆகாததால், ஆன்லைன் மூலமும் செலுத்த முடிவதில்லை. உடனடியாக சர்வர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு மக்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X