சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம்: மண்டபம் சிதைவதாக எதிர்ப்பு
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பிரகாரத்தில், அமைக்கப்படும் ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தால், தொன்மையான மண்டபம் சிதைவதாக கூறி, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில், 1,000 ஆண்டு பழமையான சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவுப்படி, கோவில் பிரகாரத்தில் நாயன்மார் சன்னதி அருகே, திருமாடபத்தி மண்டபத்தில், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக, புத்தக அலமாரிகள் வைக்கும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவில் மண்டபத்தின் தன்மை சிதைவதாக கூறி, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம், பணிகள் நிறுத்தப்பட்டன. நேற்று, மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மங்கையர்கரசி, கோவில் உதவி கமிஷனர் ராஜா (பொ) ஆகியோர் பணிகளை பார்வையிட்டனர். அப்போது, மண்டப சுவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமல், பாதுகாப்பான முறையில் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்க மாநில தலைவர் ரமேஷ் கூறியதாவது:
கோவில் பிரகாரத்தில், ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால், துாண்களில் இருக்கும் சிற்பங்கள் மறைவதற்கும், சிதைவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்து ஏற்பட்டது போல், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புத்தக விற்பனை நிலையத்தை கோவிலுக்கு வெளியே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சேலம் மண்டல இணை கமிஷனர் மங்கையர்கரசி கூறுகையில், ''ஆன்மிக புத்தக நிலையம், 1.65 லட்சம் ரூபாயில் அமைக்கும் பணி நடக்கிறது. ஆய்வு செய்து, தொன்மை மாறாமல் தான் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் உத்தரவு கிடைத்தவுடன், புத்தக நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X