150 அடி உயர மலையில் 'பாராகிளைடிங்' செய்து சாகசம்: வீடியோ வைரலானதால் வாலிபர்களிடம் விசாரணை
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெறாமல், 150 அடி உயர மலையில் இருந்து 'பாராகிளைடிங்' செய்து சாகச நிகழ்ச்சி நடத்திய வீடியோ வைரலானதால், சம்பந்தப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அருகே உள்ள அணியாபுரம், தோளூர், மற்றும் மாடகாசம்பட்டி, ஆகிய பஞ்., பகுதிகளில், சருவமலை அமைந்துள்ளது. 7 கி.மீ., நீளம், இரண்டு கி.மீ., அகலம் என்ற அளவில் பெரிய மலையாக உள்ளது.

இந்த மலையில், மாடகாசம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எம். ராசாம்பாளையத்தின், ஒரு பகுதியில், நேற்று முன்தினம் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், மலையின் உயரமான இடத்துக்கு சென்றனர்.
தொடர்ந்து, 150 அடி உயரத்துக்கு சென்ற அவர்கள், எவ்வித பாதுகாப்பும் இன்றியும், விதிமுறைகளை பின்பற்றாமலும், 'பாராகிளைடிங்' குதித்து சாகசம் செய்தனர். அதை, ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்து, 'சாகச பயம்' என வீடியோவை பரப்பினர். இந்த வீடியோ வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வியிடம் கேட்டபோது, ''பாராகிளைடிங் செய்வதற்கு இது வரை எந்த அனுமதியும் பெறவில்லை. இந்த சாகசம் செய்த இளைஞர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். மேலும், இதுபோன்று ஆபத்தான முறையில் பாராகிளைடிங் செய்வது பெரும் குற்றம். இதுபோன்று எவ்வித அனுமதியும் பெறாமல் பாராகிளைடிங் சாகசம் செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்,'' என்றார்.
இந்த பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சியை மேற்கொண்ட, நாமக்கல், பெரியமணலியை சேர்ந்த, மூன்று வாலிபர்களிடம், நாமக்கல் டி.எஸ்.பி., சுரேஷ் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, 'இதுபோன்ற சாகச நிகழ்ச்சியை, அனுமதி பெற்று முறையான பாதுகாப்புடன் நடத்த வேண்டும்' என, எச்சரித்து அனுப்பினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X