சென்னை, புதுச்சேரியில் மதுரை நிர்வாகிகள் 'குஷி'
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை : மதுரை நகர் தி.மு.க., செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தளபதி எம்.எல்.ஏ., இளைஞரணி செயலாளர் அதலை செந்தில் தரப்பில் தங்கள் ஆதரவு நிர்வாகிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோரை 'அ.தி.மு.க., ஆட்சியில் அரங்கேறிய கூவத்துார் ஸ்டைலில்' சென்னை, புதுச்சேரி சொகுசு ஓட்டல்களில் சகல கவனிப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் தி.மு.க., தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான மனுத்தாக்கல் மீதான பரிசீலனை துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 72 மாவட்ட செயலாளர் பதவிகளில் சென்னை, மதுரை, தென்காசி உட்பட சில மாவட்டங்களில் கடும் போட்டி நிலவுகிறது.மதுரையில் கட்சி தேர்தல் போல் இல்லாமல் இரண்டு அமைச்சர்கள் தங்கள் 'பவரை' நிரூபிக்கும் களமாக மாறியுள்ளது. இதனால் வட்டம், பகுதி செயலாளர்களுக்கு ரூ.லட்சங்களில் 'கவனிப்பு', கட்சிப் பதவிகள் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நிர்வாகிகள் முகாம் மாறிவிடக் கூடாது என்பதற்காக முதற்கட்ட 'கவனிப்பு' முடிந்ததும் ரயில், விமானம் மூலம் சென்னை, புதுச்சேரிக்கு அழைத்து சென்று சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுரையில் தி.மு.க., நிர்வாகிகள் முகாம் காலியாகி உள்ளது.

நிர்வாகிகள் கூறியதாவது:
மதுரை நகர் தி.மு.க.,வில் வட்டச் செயலாளர்கள் 71, பகுதி செயலாளர்கள் 18 பேர் உள்ளனர். ஒரு பகுதிக்கு 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் 70க்கும் மேல் மாவட்ட பிரதிநிதிகள் உள்ளனர். தேர்தல் நடந்தால் வட்டச் செயலாளர்கள் ஆதரவுடன் பகுதி, மாவட்ட பிரதிநிதிகள் ஓட்டளிப்பர். இதில் தளபதிக்கு 51 வட்ட செயலாளர், 6 பகுதி செயலாளர்களும், அதலை செந்திலுக்கு 15 வட்ட செயலாளர், 12 பகுதி செயலாளர்களும் ஆதரவு உள்ளது. மாவட்ட பிரதிநிதிகள் ஆதரவு இருவருக்கும் சமமாக உள்ளது.
இன்று (செப்.,27) சென்னையில் மதுரை முடிவு தெரியவுள்ளது.இதனால் ஆதரவாளர்கள் தளபதி தரப்பில் புதுச்சேரியிலும், அதலை செந்தில் தரப்பில் சென்னை மாமல்லபுரம் சொகுசு ஓட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியேற அனுமதியில்லை. ஓட்டலுக்குள் 'அனைத்து' வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.,வில் நடந்த 'கூவத்துார்' சம்பவத்தை தி.மு.க., விமர்சனம் செய்தது. தற்போது தி.மு.க.,விலும் சாதாரண நகர் செயலாளர் தேர்தலில் அதே காட்சி இரண்டு இடங்களில் அரங்கேறியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X