கிரைம் செய்திகள்...
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



காணாமல் போனவர் உடல் மீட்பு




திருக்கோவிலுார்: எரவலம் காலனியைச் சேர்ந்தவர் நடேசன் மகன் ராஜிவ்காந்தி, 35; நேற்று முன்தினம் மாலை வேங்கூர் எல்லையில் இருக்கும் தனது நிலத்திற்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது அவரது காலணி இருந்தது தெரியவந்தது. நேற்று கிணற்றில் உள்ள தண்ணீரை இறைத்து பார்த்தபோது, ராஜிவ்காந்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.அவரது தந்தை நடேசன் அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



பெண் தாக்கு: ஒருவர் மீது வழக்கு



ரிஷிவந்தியம்: பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் சிலம்பரசன், 28; இவரது மாமா ஏழுமலை. அவரது தம்பி திருமலை. இருவருக்குமிடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த தகராறில் ஏழுமலைக்கு ஆதரவாக சிலம்பரசன் பேசினார். ஆத்திரமடைந்த திருமலை சிலம்பரசனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிலம்பரசனின் மனைவி தனலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் திருமலை மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



ஒருவரைத் தாக்கிய 4 பேர் மீது வழக்கு



ரிஷிவந்தியம்: பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, 54; இவர், கடந்த 30 ஆண்டுகளாக பூர்வீக சொத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில், கந்தசாமியின் சகோதரர் ஏழுமலை மற்றும் அவரது தரப்பினர் 3 பேர், வீட்டை காலி செய்யம்படி கூறி கந்தசாமியை திட்டி, தாக்கினர். மேலும், கந்தசாமி வீட்டின் ஒரு பக்க மண் சுவற்றை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், ஏழுமலை, அவரது மனைவி குப்பாயி, சவுந்தர்ராஜன் மனைவி மங்கையற்கரசி, கணேசன் மனைவி அஞ்சலை ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



விஷம் குடித்து மூதாட்டி பலி



ரிஷிவந்தியம்: பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி குப்பம்மாள், 75; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் மீண்டும் வலி ஏற்பட்டதால், பூச்சி மருந்தை குடித்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் விசாரிக்கின்றனர்.



பிக்பாக்கெட் அடித்தவர் சிக்கினார்



உளுந்துார்பேட்டை: புதுச்சேரி அடுத்த முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் துரை மணிகண்டன், 38; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் சென்றார். உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே வந்தபோது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பர்சை காணவில்லை.பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நபர், திருச்சி செல்லும் பஸ்சில் ஏறிச் செல்ல முயன்றார். உடன் துரை மணிகண்டன் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, பர்சை பிக்பாக்கெட் அடித்து தப்ப முயன்றது தெரியவந்தது. உடன் அவரை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், திருச்சி, ராம்ஜி நகரைச் சேர்ந்த கணேசன், 56; என தெரியவந்தது. உளுந்துார்பேட்டை போலீசார், கணேசன் மீது வழக்குப் பதிந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X