பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சங்கராபுரம் சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை, நகர செயலாளர் துரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன் முன்னிலை வகித்தனர்.உதயசூரியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 308 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷாபி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் மதிவாணன் நன்றி கூறினார்.