ஆரணி:ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைபள்ளி மாணவர், சிகரெட் பிடித்ததை கண்டித்த ஆசிரியர்கள் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; இருவர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து, பள்ளி மாணவ, மாணவியர் மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 783 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் மீனாட்சி உள்ளிட்ட, 20 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கேலி, கிண்டல்
சில நாட்களுக்கு முன், பிளஸ் 1 மாணவர் ஒருவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, மாணவியரின் முகத்தில் சிகரெட் புகையை விட்டு கேலி, கிண்டல் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவியர், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன், ஆகியோர் புகை பிடித்த மாணவரை கண்டித்தனர். இதில், மாணவரை தாக்கியதில் மாணவருக்கு உள்காயம் ஏற்பட்டது.
மாணவரின் பெற்றோர், ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கடந்த, 23ல் ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.மேலும், ஆசிரியர்கள் நித்யானந்தத்தை கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், பாண்டியனை முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
உரிய நடவடிக்கை