'தமிழகத்தை கண்டு மகிழ்வோம்'சுற்றுலா நிகழ்ச்சி துவக்கம்
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, 'தமிழகத்தை கண்டு மகிழ்வோம் - -2022' என்ற நிகழ்ச்சி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், 'தமிழகத்தை கண்டு மகிழ்வோம் - -2022' எனும் நிகழ்ச்சியை, அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:கடந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுகூரும் வகையில், நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.இந்த ஆண்டு சுற்றுலா தினத்தை முன்னிட்டு, 'தமிழகத்தை கண்டு மகிழ்வோம் - -2022' எனும் நிகழ்ச்சியை துவக்கியுள்ளோம்.இதில், தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்த, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபலமான சமூக ஊடகவியலாளர்கள், 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள், பிரபலமடையாத சுற்றுலா தலங்களின் சிறப்புகளை அறிந்து, சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்துவர்.இவ்வாறு அவர் கூறினார்.நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலா தொழில் முனைவோருக்கான பதிவுகள் மேற்கொள்ள நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. பின், 'வாவ் தமிழ்நாடு' போட்டியின் மூன்றாம் பதிப்பு அறிவிக்கப்பட்டது.

இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள், வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். போட்டி முடிவுகள், பொங்கலன்று அறிவிக்கப்படுகிறது.சுற்றுலாத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய நிறுவனம், நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X