மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி,மேலநெட்டுர், குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து கேட்டு அப்பகுதி கிராம மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மானாமதுரை புதிய புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மேற்கண்ட 3 வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக மேலாளர் ராஜ்குமார் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானா மதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா, துணைத் தலைவர் முத்துசாமி, நகரச் செயலாளர் பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.