வடபழநி கோவிலில் 'மக்கள் கொலு'குத்துவிளக்கேற்றி துவக்கிய பூ விற்கும் பெண்கள்
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை, :வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா, 'சக்தி கொலு' என்ற பெயரில், மக்களின் விழாவாக நடக்கிறது. இரண்டாம் நாள் விழாவை, கோவிலில் மலர் விற்பனை செய்யும் பெண்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று, வடபழநி ஆண்டவர் கோவில். பாகுபாடின்றி அனைவருக்கும் சம மரியாதை அளிக்கப்படுவதால் பக்தர்களின் அபிமானத்தை பெற்றுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் முழு பங்களிப்புடனும், பெண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், 'சக்தி கொலு' என்ற பெயரில் ஒன்பது படி கொண்ட பிரமாண்ட கொலு, நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.நவராத்திரியின் இரண்டாம் நாளான நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.நேற்று மாலை, அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் சக்தி கொலுவை, பக்தர்களுக்கு மலர் விற்பனை செய்யும் பெண்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. பின், கணேஷின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.இதைத் தொடர்ந்து, கோவில் ஊழியர்கள், கோவிலுடன் தொடர்பில் உள்ளவர்கள் அடுத்தடுத்த நாள் கொலுவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க உள்ளனர்.



'சக்தி கொலு'

தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலும், சக்தி கொலு காட்சிகள் அமைந்துள்ளன. நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாக, கொலு பொம்மை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருமண வைபவம், வளைகாப்பு, பழங்கால கடைகள், கிராமத்து சூழல், பெருமாள் வீதி உலா, திருக்கயிலாயம், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரம், கல்விச்சாலை, சீதா கல்யாணம் உள்ளிட்ட கொலு காட்சிகள், பக்தர்களை கவர்ந்து வருகின்றன.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X