திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், பிறந்த நாள் கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், உறவினர்கள் பேக்கரியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள, பேக்கரி'யில், திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதம் என்பவர், தன் மகள் பிறந்த நாள் கொண்டாட கேக் வாங்கிச்சென்றார்.பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, அதை சிறுமி சாப்பிட்டார். அப்போது அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து, அன்றிரவு கடைக்கு சென்ற சிறுமியின் உறவினர்கள், \
இது குறித்து கேட்டபோது, பேக்கரியில் இருந்தவர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள், பேக்கரியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, ஆர்.டி.ஓ., வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், டி.எஸ்.பி., குணசேகரன் அவர்களை சமாதானம் செய்தனர்.மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள், ஆய்விற்காக பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை எடுத்து சென்றனர்.