சிவகங்கை, : காந்தியடிகள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் அக்., 12 ல் நடக்கவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் ஆகிய நான்கு தலைப்புகளிலும், கல்லுாரி மாணவர்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும், காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய 6 தலைப்புகளிலும் பேச அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியின் போது தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தலைப்புகள் குலுக்கு சீட்டு அடிப்படையில் எடுக்கப்பட்டு மாணவர்கள் பேச அனுமதிப்பார்கள்.அனைத்து தலைப்புகளில் பேசும் வகையில் மாணவர்கள் தயார் நிலையில் வர வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து, பள்ளி தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வர் ஒப்புதல் கடிதம் பெற்று தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரிடம் போட்டியின் போது நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை நேரிலோ, தொலை பேசி வாயிலாக 04575 - 241 487 தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.