கஞ்சாவுடன் மூதாட்டி கைது
மதுரை: கரிமேடு அழகம்மாள் 46, தத்தனேரி களத்துபொட்டல் உதயகுமார் 35, ஆகியோரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் 6 கிலோ கஞ்சாவுடன் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கைது செய்தார்.
ஓட்டலில் புகையிலை பொருட்கள்
திருமங்கலம்: கூத்தியார்குண்டு சந்திரசேகர் 51. இவரது மகன் பாலசுப்பிரமணி 22. அதே பகுதியில் ஓட்டல் வைத்துள்ளனர். இங்கு 8 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
உண்டியலை உடைத்து திருட்டு
திருமங்கலம்: மைக்குடியில் பஞ்சமுக விநாயகர் கோயில் உள்ளது. இதன் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். பூஜாரி பாண்டி புகாரில் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் இருந்து விழுந்த பெண் பலி
பேரையூர்: ராஜபாளையம் மின்வாரிய ஊழியர் செந்தில்குமார். இவரது மனைவி பார்வதி 44. ஆயுர்வேத மருந்து விற்பனையாளர். மருந்து வாங்க திருமங்கலம் வந்துள்ளார். குடும்ப நண்பர் கே.புளியங்குளம் சிங்கராஜாவுடன் 33, டூவீலரில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) திருமங்கலத்தில் இருந்து டி.குண்ணத்துாருக்கு சென்றபோது, வளைவில் திரும்பும்போது டூவீலரில் இருந்து விழுந்து பார்வதி இறந்தார்.
விவசாயி தற்கொலை
பேரையூர்: என்.முத்துலிங்கபுரம் பாஸ்கரன் 59. விவசாயி. இவர் அதே ஊரில் உள்ள கண்மாயில் மாடு மேய்த்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் இருந்து ரூ.2 லட்சம் திருட்டு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி - மதுரை ரோட்டில் கோழிக்கறி கடை வைத்துள்ளவர் ஜெகன் 28. பேரையூர் ரோட்டில் உள்ள கனரா வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ. 2 லட்சத்தை டூ வீலரில் வைத்து விட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள டீக்கடைக்கு சென்றார். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.