பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு...அழைப்பு; மாவட்டத்தில் 751 வருவாய் கிராமங்கள் தேர்வு
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கடலுார் : பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பு மற்றும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்யுமாறு,விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டில், சிறப்பு மற்றும் ரபி பருவமாக தமிழகத்தில் நெல், மக்காச் சோளம், பருத்தி, உளுந்து ஆகியவற்றை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டில், கடலுார் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் பயிருக்கு 751 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.நெல் -சம்பா, பருத்தி, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள்

இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் வரும் நவம்பர் 15ம் தேதி எனவும், மக்காச்சோளம் பயிருக்கு வரும் அக்டோபர் 31ம் தேதி, விவசாயிகள் இத்திட்டத்தில் பிரிமியம் செலுத்தக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இயற்கை இடர்பாடு நிகழ்வுக்கு முன்னரே பதிவு செய்து இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு விவசாயிகளை, வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.பயிர் காப்பீட்டு தொகையில், நெல் மற்றும் இதர வேளாண்மை பயிர்களுக்கு விவசாயிகள் 1.5 சதவீதமும், பருத்தி மற்றும் இதர பணப்பயிர்களுக்கு 5 சதவீதமும் பிரிமியம் தொகையாக செலுத்த வேண்டும்.அதாவது, ஏக்கருக்கு நெற்பயிருக்கு (நெல்-சம்பா) 552 ரூபாய், பருத்தி பயிருக்கு 461 ரூபாய், மக்காச் சோளம் பயிருக்கு 331 ரூபாய், உளுந்து பயிருக்கு 271 ரூபாய் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் இ-அடங்கல் (அ) அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது ஒரே சர்வே எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்தாலோ, சாகுபடி செய்யப்பட்ட பரப்பினைவிட கூடுதலாக பதிவு செய்தாலோ, தவறான பதிவுகள் நீக்கம் செய்யப்படும்.இத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் தங்களது சந்தேகங்களை, உரிய பயிர் காப்பீட்டு நிறுவன முகவர் அல்லது தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X