வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு தேர்வுக்கு பயிற்சி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு தேர்வுக்கு பயிற்சி
Added : செப் 28, 2022 | |
Advertisement
 



விழுப்புரம் : மத்திய அரசு தேர்வுக்கு விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இதற்கான கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். இவற்றிற்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் அக்டோபர் 8 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இத்தேர்விற்கு விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 8ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.தேர்வுக்கு, விண்ணப்பித்த நபர்கள் வரும் 7ம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகி, பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு 9499 055906 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X