இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை
Added : செப் 28, 2022 | |
Advertisement
 



விழுப்புரம் : திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது பெண். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த எட்டியான் மகன் ராமச்சந்திரன், 26; என்பவருடன் கடந்த 2013ம் ஆண்டு பழகி வந்தார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி ராமச்சந்திரன், அப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

பின்பு, அப்பெண் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது, ராமச்சந்திரன் மறுத்து விட்டார். மேலும், அவரது தந்தை எட்டியான், தாய் பரிமளா, சகோதரி புவனேஸ்வரி, உறவினர் துரை ஆகியோர் அப்பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ராமச்சந்திரன், அவரது தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். மற்ற நால்வரும் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப் பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X