இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து முற்றுகை: விக்கிரவாண்டியில் பரபரப்பு
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பாம்பு கடித்த மாணவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்ததாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவ மனையை முற்றுகையிட்டனர்.



விக்கிரவாண்டி அடுத்த தொரவி கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகள் சாருமதி,16: பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அப்பா இறந்து விட்டதால் அம்மா சுகுணா,33 கூலி வேலை செய்து மகளை படிக்க வைத்து வந்தார்.கடந்த 24 ம் அன்று காலை 8 மணியளவில் சாருமதியை பாம்பு கடித்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற சாருமதி நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் இறந்தார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கிராம பொதுமக்கள் மருத்துவ மனை முன்பு திரண்டு மருத்துவ மனையில் முறையான சிகிச்சை இல்லாததால் மாணவி இறந்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்த விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரிவினாயகம், தொரவி ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.இதனால் மறியல் முயற்சியை கை விட்டு மருத்துவ மனையை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X