காசிமேடில் ராட்சத குழாய் உடைந்து ஆறாக ஓடிய கச்சா எண்ணெய்
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காசிமேடு: சென்னை துறைமுகத்திற்கு, வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் வாயிலாக கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. பின் அங்கிருந்து, கச்சா எண்ணெய் குழாய்கள் வாயிலாக ராயபுரம், காசிமேடு, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை வழியாக திருவொற்றியூர், மணலியில் உள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில் துறைமுகத்திலிருந்து, பூமிக்கு அடியில் செல்லும் ராட்சத குழாய் வாயிலாக திருவொற்றியூர், தாங்கல் பகுதியிலுள்ள கே.டி.வி.சன்லேன் ஆயில் என்ற தனியார் நிறுவனத்திற்கு, பாமாயில் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

நேற்று அதிகாலை, காசிமேடு மீன்பிடி பகுதியில், படகு பழுது பார்க்கும் இடம் அருகே, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறியது. 3,000 லிட்டர் அளவிற்கு வெளியேறியதால், அப்பகுதியில் 70 மீட்டர் வரை தேங்கி, குளம் போல் காட்சியளித்தது.மீனவர்கள் காவல் நிலையம், எண்ணெய் நிறுவனத்திற்கு தகவல் அளித்தனர்.



latest tamil news



இதன்படி, எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வந்து, எண்ணெய் கசிவை சரி செய்தனர். பின், மோட்டார் வாயிலாக கச்சா எண்ணெயை அப்புறப்படுத்தும் போது, சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில் மீனவர்கள், கச்சா எண்ணெய் கடலில் கலந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின், மீனவர்களிடம் சமரசம் பேசி, பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், கச்சா எண்ணெயை வாளிகளில் அள்ளி 'பேரல்'களில் நிரப்பி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 'கச்சா எண்ணெய் மண்ணில் கலந்துள்ள ஆழம் குறித்து ஆய்வு செய்து, அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

இதுகுறித்து, அனைத்து மீனவர் சங்க தலைவர் நாஞ்சில் ரவி, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:காசிமேடில் குழாய் உடைந்து தேங்கிய கச்சா எண்ணெய், மழைநீர் மற்றும் கழிவுநீர் குழாய் வழியாக காசிமேடு கடலில் கலந்துள்ளது. இதற்கு, எண்ணெய் நிறுவனத்தின் கவனக் குறைவே காரணம்.

இதனால் குடிநீர், மண்வளம் மற்றும் கடல் வளம் பாதிக்கப்படும். இந்த கச்சா எண்ணெய், மழையின் போது கடலில் பெரிய அளவில் கலக்கும். கடல் மாசுபடும்; மீன்வளம் பாதிக்கும். எண்ணெய் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.டி.தயாளன் அளித்த புகார்:
எண்ணுார் துறைமுகத்தில், கடந்த 2017ல் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதில், அதிக அளவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கடலில் பரவிய எண்ணெய் படலத்தை, வாளியால் அப்புறப்படுத்தினர். தற்போதும் வாளிகளில் தான் அள்ளுகின்றனர். எந்தவித புது தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை. 'ஜீரோ கேட்' துவங்கி, எண்ணெய் நிறுவனம் வரை செல்லும் குழாய்களை, அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X