கடலுாரில் 2 ரவுடிகள் குண்டாசில் கைது
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



கடலுார் : கடலுாரில், கொலை வழக்கு சாட்சியை மிரட்டி, கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.



கடலுார், திருப்பாதிரிபுலியூர் சுப்ராயலு நகரை சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கன். பிரபல ரவுடியான இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான அவரது தந்தை கனகராஜ், 60. கடந்த மாதம் 20ம் தேதி, கூத்தப்பாக்கம் ரயில்வே கெர்டர் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த, வீரா கொலை வழக்கில் தொடர்புடைய குப்பன்குளத்தை சேர்ந்த ஜீவா (எ) ஜீவானந்தம் உட்பட 5 பேர், கனகராஜை வழிமறித்து மிரட்டியதுடன், கொலை செய்யவும் முயன்றுள்ளனர்.

இதுகுறித்து, கனகராஜ் அளித்த புகாரில், திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து, குப்பன்குளத்தை சேர்ந்த முருகன் மகன் ஜீவா (எ) ஜீவானந்தம், பழனிவேல் மகன் மதன் (எ) மதன்குமார், 19; சுப்ராயலு நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவின்ராஜ், 20; மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் என, 5 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் மற்றும் மதன்குமார் இருவர் மீதும் கொலை வழக்கு, கொலை முயற்சி, கஞ்சா உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. எனவே, இவர்களின் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு, எஸ்.பி., சக்திகணேசன் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஜீவானந்தம், மதன்குமார் ஆகிய இருவரும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X