பண்ருட்டி : பண்ருட்டி அருகே, விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் மற்றும் ரூ.2.15 லட்சம் ரொக்கத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகாலை 4:00 மணிக்கு செல்வகுமார் பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 26 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. காடாம்புலியூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் வேகாக்கொல்லை சாலை வரை ஓடி நின்றது. தடய அறிவியல் நிபுணர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.