திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ராஜவல்லிபுரத்தை சேர்ந்த துரைராஜ் என்பவர் அதே பகுதியில் பலசரக்குகடை வைத்து நடத்தி வருகிறார்.
மேற்படி கடையை உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்து, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்ததற்காக ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்த நிலையில் மீண்டும் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததற்காக கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து இருந்த நிலையில் மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது.
மேற்படி துரைராஜ் என்பவர் புகையிலை பொருட்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது சென்னையில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் கவனத்திற்கு வந்ததன் பேரில், துரைராஜ்யின் கடைக்கு நிரந்தரமாக சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திருமதி. சசிதீபா அவர்கள் தலைமையில் தாழையூத்து உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ்குமார் மற்றும் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலையில் துரைராஜ்யின் கடையை நிரந்தரமாக அடைக்கப்பட்டு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.