தூத்துக்குடி,:தமிழகம் முழுவதும் பெருமளவில் குட்கா சப்ளை செய்த பெங்களூருவை சேர்ந்த கோடீஸ்வரர் சாமுவேல் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
துாத்துக்குடிஎஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவில் ரூரல் டி.எஸ்.பி.,சந்தீஷ் தனிப்படையினர் பெங்களூருவில் பின்னி பேட் பகுதியில் இருந்த சாம் ஜெயக்குமாரை கைது செய்தனர். சாம் எண்டர்பிரைசஸ், லேன்ட்ஸ்டார், செல்வி எண்டர்பிரைசஸ் போன்ற பெயர்களில் போலி கம்பெனிகள் ஏற்படுத்தி வங்கி கணக்குகள் மூலம் காய், கனி விற்பனை செய்வது போல குட்கா விற்பனை செய்து தெரிய வந்தது.
16 லட்சம் ரூபாய் இருந்த அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. அவர் போலியான நிறுவனங்களுக்காக ஒரு கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,வரி செலுத்தி இருப்பதும் தெரிய வந்தது. கோடீஸ்வரரான சாமுவேல் ஜெயக்குமாரை கைது செய்து தனிப்படையினரை எஸ்.பி., பாராட்டினார்.