ரூ. 10 கோடி நிலம் மீட்புஆள் மாறாட்டம் செய்தவர் கைது | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
ரூ. 10 கோடி நிலம் மீட்புஆள் மாறாட்டம் செய்தவர் கைது
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
Latest district News

திருநெல்வேலி:வள்ளியூரில் ரூ.10 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து விற்ற நபர் கைது செய்யப்பட்டார். நிலம் மீட்கப்பட்டது.


திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பகவதி. வடக்கு வள்ளியூரில் இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. அதன் மதிப்பு ரூ. 10 கோடி. வடக்கு வள்ளியூரை சேர்ந்த அழகேசன் 52, என்பவர் பகவதி போல ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணங்கள் தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்தார்.
இது குறித்து திருநெல்வேலி எஸ்.பி, சரவணனிடம் புகார் செய்யப்பட்டது. எஸ்.பி., உத்தரவில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் அழகேசனை கைது செய்தனர். ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டு பகவதியிடம் வழங்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X