காஞ்சி, செங்கையில் நிரம்பிய நீர்நிலைகள் நிம்மதி!149 ஏரிகளில் 50 சதவீத நீர் கையிருப்பு
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கு மேல் 149 ஏரிகள் நிரம்பியுள்ளன. பருவமழை துவங்கிய ஓரிரு நாட்களில் முக்கிய ஏரிகள் நிரம்பும் என்பதால், விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்னை இருக்காது என்பதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.குறிப்பாக, ஏரிகள் அதிகமுள்ள இந்த இரு மாவட்டங்களில் உள்ள நீர்வளத் துறைக்குட்பட்ட ஏரிகளை, அதிகாரிகள் இப்போதே கண்காணிக்க துவங்கியுள்ளனர்.
ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு, ஏரியில் ஏற்பட்டுள்ள பழுது, ஷட்டர் பராமரிப்பு, மதகுகளின் தற்போதைய நிலை என, அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவமழை காரணமாக, நுாற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி வழியும்.ஆனால், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், கோடை காலம் எதிரொலி காரணமாக, தண்ணீர் வறண்டு, ஏரிகள் வறட்சியாக காணப்படும்.

பல ஆண்டுகளாகவே தொடர்ந்து இதுபோன்ற வறட்சி நிலைமை சற்று மாறியுள்ளது.இந்தாண்டு கோடை மழை, கர்நாடகாவில் பெய்த மழையால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளில், இப்போதும் நீர் இருப்பு கணிசமாகவே உள்ளது. கோடை காலம் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையிலும், நீர் இருப்பு குறையாததால், அடுத்த மாதம் துவங்கும் பருவமழையில், இந்த ஏரிகள் வேகமாக நிரம்பும்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய 16 ஏரிகளில், தாமல், ஸ்ரீபெரும்புதுார், கொளவாய், மணிமங்கலம், உத்திரமேரூர், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட பெரிய ஏரிகளிலும் தண்ணீர் கணிசமாக உள்ளதால், விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளர்.ஏரிகளில் தண்ணீர் இருப்பதால், கன மழை காரணமாக, ஏரிகள் வேகமாக நிரம்பி, கரைகளில் பாதிப்பு ஏற்படலாம்.இதனால், ஏரியின் கரைகளை கண்காணிக்கவும், ஷட்டர், மதகு போன்றவற்றின் நிலை குறித்து அறிய, நீர்வளத் துறை அதிகாரிகள், தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் 381 ஏரிகளில், 50 முதல் 100 சதவீதம் வரை 108 ஏரிகள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 50 முதல் 100 சதவீதம் வரை, 41 ஏரிகள் தற்போதும் நிரம்பி உள்ளன. இந்த ஏரிகள், பருவமழை துவங்கிய ஓரிரு நாட்களிலேயே முழுதாக நிரம்பும் வாய்ப்புள்ளது.
பருவமழைக்கு முன்பாக, ஏரிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், ஏரி ஆக்கிரமிப்புகள் மீதான நடவடிக்கைகள் மெத்தனமாகவே உள்ளன. குறிப்பாக, மணிமங்கலம் மற்றும் அனைக்கட்டு தாங்கல் ஏரிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று வரை அகற்றாமல், மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.




வேகவதிக்கு ரூ.65 லட்சம் ஒதுக்கீடு!


வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறைக்கு, 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம், வேகவதி, அடையாறு சீரமைப்பு மற்றும் ஏரிகளில் உள்ள பழுது சரிசெய்யப்பட உள்ளது.முதற்கட்டமாக, வேகவதி ஆற்றில் உள்ள செடிகள் மற்றும் சேற்றை அகற்றும் பணிகள், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் நேற்று துவங்கியுள்ளன.வேகவதி ஆற்றில் தண்ணீர் செல்ல ஏதுவாக, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.





உத்திரமேரூர் ஏரிக்கு ரூ.18 கோடி


இரு மாவட்டங்களிலும் உள்ள மிகப்பெரிய 16 ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம், 5,636 ஏக்கர் பாசனம் செய்ய முடியும். 20 அடி உயரம் வரை நீர்த்தேக்க முடியும். மொத்த கொள்ளளவாக, 958.81 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கலாம். இவ்வளவு பெரிய ஏரியில், கடந்தாண்டு பருவமழையின்போது இரண்டு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரிசெய்ய, 'நபார்டு' மூலம் நிதி பெற, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம், 18 கோடி ரூபாய், உத்திரமேரூர் ஏரியை சரிசெய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை மறுமதிப்பீடு செய்ய ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு இடங்களில் பாதிப்பு இருப்பதால், தற்போது 15 அடி வரை மட்டுமே நீர் நிரப்பியுள்ளனர்.



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X